தளபதி விஜய்க்கென ரசிகர்கள் கூட்டம் கடல் போல் உள்ளது. விஜய்யின் கொண்டாடப்படும் திரைப்படங்களில் முதன்மையான திரைப்படம் கில்லி என்றால் அதற்கு மறுப்பு கிடையாது.
இன்றும் தொலைக்காட்சியில் கில்லி படம் ஒளிபரப்பப்பட்டால் அன்றைய TRP கில்லி திரைப்படத்தின் வசமே.
2004ஆம் ஆண்டு இயக்குனர் தரணியின் இயக்கத்தில், விஜய், திரிஷா, பிரகாஸ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம். தாமு, மயில்சாமி இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
சாய் சூர்யா மூவிஸ் தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
கபடி விளையாட்டை மையமாக கொண்ட, ஆக்சன்-காமெடி கலந்த இந்த திரைப்படம் 2003ஆம் ஆண்டு வெளியான ஓக்கடு என்னும் தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இதில் மகேஷ் பாபு நடித்திருந்தார்.
வித்யாசாகர் இசையமைத்த கில்லி திரைப்படம் 200 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது.
தற்போது இந்த திரைப்படம் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது.
நடிகர் விஜய்க்கு தமிழகத்தை போலவே கேரளாவிலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி கேரளாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.
கேரளாவில் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், திரையரங்கின் உரிமையாளர் ஒருவர் கில்லி திரைப்படத்தை ரீ- ரிலீஸ் செய்துள்ளார்.