இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. மேலும் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அடிலெய்டு மைதானத்தில் இரண்டாவது போட்டியில் விளையாடி வருகிறது.
இதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு முதல் நாள் போட்டியில் 33 ஓவருக்கு ஒரு ஓவர் கொடுக்கப்பட்டது. அதன் பின் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் பந்து வீசினார்.
மிட்செல் மார்ஷுகு பந்து வீசிய அஸ்வின் அவர் பேடில் பட்டதாக அஸ்வின் கத்தினார், பின் ரோஹித் இடம் கலந்துரையாடி ரிவ்யூ எடுக்கப்பட்டது. ஆனால் நாட் அவுட் கொடுக்கப்பட்டது. அடுத்த ஓவரில் பந்து வீசிய அஸ்வின் விக்கெட்டை எடுத்தார்.
அஸ்வின் வீசிய பந்து நேராக ரிஷப் பண்ட் கேட்ச் கொடுத்து விக்கெட்டனாது. இந்திய அணி ஒரே ஒரு ஸ்பின்னருடன் களமிறங்கியுள்ளது.அதற்கு காரணம் அனுபவம் இதற்கு முன் அடிலெய்டு மைதானத்தில் இதுவரை தற்போது எடுத்த விக்கெட்டுடன் சேர்த்து அஸ்வின் 17 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்த போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுப்பாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.