விஜய்யை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த கில்லி படக்குழுவினர்!!

Photo of author

By Rupa

விஜய்யை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த கில்லி படக்குழுவினர்!!

Rupa

Gilli film crew met Vijay in person and requested!!

விஜய்யை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்த கில்லி படக்குழுவினர்!!

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான கில்லி படம் அந்த சமயத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை த்ரிஷா நடிக்க இயக்குனர் தரணி இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து இப்படம் தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விட கில்லி படத்திற்கு அதிக வரவேற்பை கொடுத்து வருகிறார்கள் ரசிகர்கள். உண்மையை கூற வேண்டுமானால், விஜய் ரசிகர்கள் கில்லி படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் இப்போது வரை ஒட்டுமொத்தமாக 18 கோடிக்கும் வசூல் செய்து விட்டதாம்.

நிச்சயம் 20 கோடி வரை வசூல் செய்துவிடும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்து வருகிறார்கள். இதற்கிடையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது கில்லி படத்தின் இயக்குனர் தரணி, தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம், விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகியோர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

அதுமட்டுமல்ல அரசியலுக்கும் மக்களுக்கும் நீங்கள் நிறைய நேரத்தை செலவிடுங்கள். ஆனால் வருடத்திற்கு ஒரு படமாவது நீங்கள் நடிக்க வேண்டும். வியாபாரம் என்பதை தாண்டி, திரையரங்குகளில் கூஸ்பம்ஸ் தருணமாக உள்ளது என கில்லி படக்குழுவினர் நடிகர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை விஜய் நிறைவேற்றுவாரா என்பது தெரியவில்லை.

கில்லி படக்குழுவினர் மட்டுமல்ல பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் கூட விஜய் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று தான் கூறி வருகிறார்கள். ஏனெனில் விஜய் சினிமாவை விட்டு மொத்தமாக விலகுவதை அவரின் ரசிகர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரை திரையில் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறார்கள். அவர்களின் ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.