5 வருடத்திற்குப் பின் பிறந்த பெண் குழந்தை! தந்தை செய்த கொடூர செயல்!

Photo of author

By Kowsalya

ஹரியானா மாநிலத்தில் ஐந்து வருடத்திற்குப் பின் பெண் குழந்தை பெற்றதால் தாய் தூங்கிக் கொண்டிருந்த நேரம் பெண் குழந்தையை காலால் மிதித்து மூச்சுத்திணற வைத்து தந்தையே குழந்தையை கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யமுனாநகரின் பாதி மஜ்ரா பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் நீரஜ். இவரது மனைவி வர்ஷா. இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதனால் நீரஜ் வர்ஷாவிடம் பெண் குழந்தை பிறந்ததற்கு தகராறில் ஈடுபட்டார் என கூறப்படுகிறது.

நீரஜ் ஒரு மதுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.மேலும் 2015 ஆம் ஆண்டு திருமணம் ஆனவர்களுக்கு ஐந்து வருடம் கழித்து செப்டம்பர் 24-ஆம் தேதி தான் குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்ததால் மனமுடைந்து உள்ளார் என கூறப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை அன்று குழந்தைக்கு அருகில் வந்து படுத்த நீரசஜ் வர்ஷா தூங்கிக் கொண்டிருந்த நிலையில் காலால் குழந்தையின் முகத்தை மிதித்து அதற்கு மூச்சுத்திணற வைத்து குழந்தையை கொன்றுள்ளார்.

ஆத்திரமடைந்த வர்ஷா காவல்நிலையத்தில் தன் கணவர் தன் குழந்தையை கொன்று விட்டதாக புகார் அளித்துள்ளார்.

புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் நீரஜ் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 302 (கொலை) கீழ் செவ்வாய்க்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.

குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. பிஞ்சு குழந்தையை கொல்லும் அளவிற்கு தந்தையின் கொடூர எண்ணம் மாறியுள்ளது.