பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்!! உதவித்தொகையை பெற வருமாறு முதல்வர் வேண்டுகோள்!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றார்.அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றது.
அதன்பின்னர் குடும்பத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதற்கான அறிவிப்பும் தற்பொழுது வெளிவந்தது.அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி இந்த திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் பெண்களுக்கான திட்டமான முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் என்ற சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 2001 ஆம் தொடங்கப்பட இந்த திட்டத்தின் மூலம் மட்டும் சுமார் 900056 பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த திட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் ,ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்குழந்தை இருக்கும் பட்சத்தில் என்று பல பெண்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இவ்வாறு வழங்கப்படும் உதவித்தொகை அந்த பெண்குழந்தைகள் பெயரில் முதலீடு செய்யப்படும்.இந்த வகையில் ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் தலா 25000 ரூபாய் வழங்கப்படும்.மேலும் இதனை பெற வேண்டும் என்றால் அவர்களின் ஆண்டு வருமானம் 72000ரூபாய்க்கு கீழ் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் 10 வருடங்களுக்கு மேல் வசிபவராக இருக்க வேண்டும்.இதனை பெற விரும்பும் பெண்கள் அருகில் உள்ள இ சேவை மையம் சென்று விண்ணபிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
எனவே முதலமைச்சரின் பெண் குழந்தை என்ற பாதுகாப்பு திட்டத்தில் இணையும் பெண்கள் அவகளுக்கு கட்டாயம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. மேலும் இணைத்துள்ள பெண்கள் தங்கள் பெயரை வங்கி கணக்கு புத்தக நகலுடன் விண்ணபித்த மாவட்ட சமூக நல அலுவலக்கதை அணுக வேண்டும் என்று வலியூர்தப்படுள்ளது.இதன் மூலம் உங்களின் முதிர்வு தொகை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.