சிறுமி தற்கொலை: அதிர்ச்சியில் பெற்றோர்!

0
185

மயிலாப்பூரில் சிறுமி மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: மயிலாப்பூர், கணேசபுரத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 40). இவரது மனைவி மலர்விழி (வயது 38). இவர்களுக்கு, 16 மற்றும் 12 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். கணேசனும் மலர்விழியும் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம், இருவரும் பணிக்கு சென்றிருந்த நிலையில், அக்கா, தங்கை இடையே, ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த தங்கை, கவிப்பிரியா, தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற மயிலாப்பூர் காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இச்சம்பவம் குறித்து, விசாரித்து வருகின்றனர்.

Previous articleஎப்பயோ கொடுத்த லிப் லாக் முத்தம் இப்போது வைரலாகுதே!: பிரபல நடிகையின் குமுறல் 
Next articleஇரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மாலை தொடங்குகிறது