சென்னை ரயில் நிலையத்தில் பெண் கற்பழித்து கொலை? வெளியான திடுக்கிடும் தகவல்

Photo of author

By Anand

சென்னை ரயில் நிலையத்தில் பெண் கற்பழித்து கொலை? வெளியான திடுக்கிடும் தகவல்

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கஞ்சா கும்பலைச் சேர்ந்த சில நபர்களை விசாரித்துள்ளனர். அப்போது கஞ்சா போதையிலிருந்த அந்த நபர்கள் திடுக்கிடும் தகவல் ஒன்றை காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சென்னை கிரீன்வேய்ஸ் சாலை ரெயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.ஆரம்பத்தில் போதையில் உளறுவதாக எண்ணிய காவல்துறையினர் மேலும் விசாரித்ததில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் உடலை, அந்த ரெயில் நிலையத்தில் உள்ள குடோனுக்குள் வீசி விட்டு, அந்த குற்றவாளிகள் தப்பி சென்று விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

போதையில் இருந்தாலும் அவர்கள் கூறிய தகவலில் உண்மை இருப்பதை உணர்ந்த காவல்துறையினர் சம்பந்தபட்ட பகுதிக்கு சென்று சோதனையிட்டுள்ளனர். அந்தவகையில் போதை ஆசாமிகள் கூறிய அந்த கிரீன்வேய்ஸ் சாலை ரெயில் நிலைய குடோனிலும் சோதனை செய்துள்ளனர்.இந்த சோதனையின் போது அங்கு எலும்பு கூடு ஒன்று கிடைத்துள்ளது.மேலும் அது ஒரு பெண்ணின் உடலமைப்பில் உள்ள தடயங்களும் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அதை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.இதனையடுத்து மேலும் இது குறித்த தகவலை அறிய அந்த கஞ்சா கும்பலை மீண்டும் விசாரித்துள்ளனர். இந்த விசாரணையின்போது கற்பழித்து கொலை செய்த அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவரின் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அந்த நபரை தேடி காவல்துறையினர் சென்றுள்ளனர். ஆனால் ஏற்கனவே அந்த நபர் கடந்த 3 மாதங்களாக தலைமறைவாகி விட்டார் என்பது தெரியவந்துள்ளது.

இது அங்கு சென்ற காவல் துறை அதிகாரிகளுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனையடுத்து கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் உத்தரவின் பேரில், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் சாம்சன் உள்ளிட்டோர் மேற்பார்வையில் கோட்டூர்புரம் காவல்துறையினர் இதுகுறித்து அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.