சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதை ஒரு முறை கொடுங்கள்!!! அப்புறம் நீங்களே அசந்து போய்விடுவீர்கள்!!!!

0
233

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதை ஒரு முறை கொடுங்கள்!!! அப்புறம் நீங்களே அசந்து போய்விடுவீர்கள்!!!!

தற்பொழுது எல்லாம் குழந்தைகளை சாப்பிட வைப்பதே பெரும் வேலையாக உள்ளது. எந்த உணவை ருசியாக சமைத்துக் கொடுத்தாலும் கூட குழந்தைகள் சாப்பிடுவதில்லை. தினசரி வேலைகளில் தாய்மார்களுக்கு பெரும் வேலையாக குழந்தைகளுக்கு உணவளிப்பது தான் உள்ளது. அவ்வாறு இருக்கும் குழந்தைகளுக்கு இதை ஒரு முறை செய்து கொடுத்தாலே போதும் இனி அடம் பிடிப்பதையே மறந்து விடுவார்கள்.

சுக்கு, மிளகு ,திப்பிலி ,ஏலக்காய், சீரகம் ஆகிய பொருட்களை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சிறிதளவு நாட்டு சக்கரை சேர்த்து காற்று போகாத பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன் மூன்று ஸ்பூன் எடுத்து தேன் கலந்து கொடுத்து வாருங்கள்.

இது இனிப்பாக இருப்பதால் குழந்தைகள் கட்டாயம் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். இதில் உள்ள அனைத்து பொருட்களுமே பசியை தூண்டும் தன்மை உடையது. அதனால் குழந்தைகளுக்கு அதிக அளவில் பசி எடுக்கும். குழந்தைகளும் மிச்சம் வைக்காமல் அனைத்தையும் சாப்பிடுவர். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இதனை உண்ணலாம்.

Previous articleசகல விதமான நோயையும் குணப்படுத்தும் தேன் நெல்லிக்காய்! எப்படி செய்யலாம்?
Next articleசௌபாக்கியங்களை அருளும் விநாயகர் விரதங்கள்