பலா பழத்தை விடுங்க.. பலா பிஞ்சு சூப் குடித்தால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

Photo of author

By Divya

பலா பழத்தை விடுங்க.. பலா பிஞ்சு சூப் குடித்தால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

Divya

அனைவரும் விரும்பும் பலா பழம் கோடை காலத்தில் விளைச்சலுக்கு வருகிறது.பலாப்பழத்தைவிட பலா பிஞ்சை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

பலா பிஞ்சின் அத்தியாவசிய சத்துக்கள்:

**புரதம் **மாவுச்சத்து **நார்ச்சத்து **பாஸ்பரஸ் **பொட்டாசியம் **மெக்னீசியம் **சோடியம் **கொழுப்பு **சுண்ணாம்புச்சத்து **வைட்டமின் சி

பலா பிஞ்சு சூப் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

1)பலா பிஞ்சு
2)மஞ்சள் தூள்
3)உப்பு
4)சீரகம்
5)மிளகுத் தூள்
6)பூண்டு பல்

செய்முறை விளக்கம்:-

ஒரு பலா பிஞ்சை தோல் நீக்கிவிட்டு உள்ளிருக்கும் சதைப்பற்றை மட்டும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பலா பிஞ்சுகளை போட்டு வதக்க வேண்டும்.அதன் பின்னர் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும்.

அடுத்து அரை தேக்கரண்டி சீரகத்தை உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.அதேபோல் ஐந்து மிளகை லேசாக தட்டி கொள்ள வேண்டும்.இவை இரண்டையும் பலா பிஞ்சில் கொட்டி வதக்க வேண்டும்.பிறகு இரண்டு வெள்ளைப்பூண்டு பல்லை தோல் நீக்கிவிட்டு இடித்து அதில் போட்டு வதக்க வேண்டும்.

இப்பொழுது ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.அவ்வளவு தான் அருமையான பலா பிஞ்சு சூப் ரெடி.

பலா பிஞ்சு ஆரோக்கிய நன்மைகள்:

அடிக்கடி பலா பிஞ்சு உணவுகளை சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.பலா பிஞ்சுகளை சூப்பாக செய்து சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு நீங்கும்.வயிற்று வலி பிரச்சனையை சரி செய்ய பலா பிஞ்சு சூப் குடிக்கலாம்.

உடலில் வாதம்,பித்தம் ஆகியவை சமநிலையில் இருக்க பலா பிஞ்சுகளை சூப்பாக செய்து குடிக்கலாம்.பாலாவில் வைட்டமின் ஏ சத்து நிறைந்து காணப்படுகிறது.பலா காயில் சூப் செய்து குடித்து வந்தால் கண் ஆரோக்கியம் மேம்படும்.

உடலில் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்க பல பிஞ்சை உணவாக சாப்பிடலாம்.தைராய்டு பாதிப்பில் இருந்து மீள பலாப்பிஞ்சுகளை உணவாக உட்கொள்ளலாம்.