உங்களுக்கு பிடித்த பழங்களில் பட்டியலில் நிச்சயம் கொய்யா பழம் இருக்கும்.இந்த பழம் ஆப்பிளை விட அதிக ஊட்டச்சத்து நிறைந்தவை என்றாலும் இதை மகிமை பலருக்கும் தெரிவித்தில்லை.அதேபோல் தான் கொய்யா இலையின் மருத்துவ குணங்கள் பற்றி பலரும் அறிவதில்லை.
கொய்யா இலையில் வைட்டமின் சி,ஏ,பொட்டாசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.சரும பிரச்சனைகள்,சர்க்கரை நோய்,உடல் சோர்வு போன்றவற்றிற்கு கொய்யா இலை மருந்தாக திகழ்கிறது.
இரண்டு கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு நொடியில் கட்டுக்குள் வரும்.காலையில் வெறும் வயிற்றில் கொய்யா இலை தேநீர் குடித்தால் உடலில் நோய் சக்தி அதிகரிக்கும்.
கொய்யா இலை சாறு சரும பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள கொய்யா இலை நீர் பருகலாம்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் கொய்யா இலை டீ பருகலாம்.இவை உடலில் உள்ள கலோரிகளை எரித்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க கொய்யா இலையில் தேநீர் செய்து குடிக்கலாம்.உடல் சுறுசுறுப்பாக இயங்க கொய்யா இலையை கொதிக்க வைத்த நீர் பருக வேண்டும்.இனி டீ காபிக்கு பதில் கொய்யா இலை பானம் செய்து அருந்துங்கள்.