தமிழக பாஜக தலைவர் ஆகின்றாரா ஜிகே வாசன்?

0
129

தமிழக பாஜக தலைவர் ஆகின்றாரா ஜிகே வாசன்?

காங்கிரஸ் கட்சி மீது தீவிர பற்று கொண்ட ஜி கே மூப்பனார் அவர்களின் வாரிசான ஜிகே வாசன் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் இடம் பிடித்த போது, அவர் பாஜக தலைவர்களுடன் நெருக்கமானார்

இந்த நிலையில் சீன அதிபருடன் சென்னை வந்த பிரதமர் மோடியை ஜிகே வாசன் வரவேற்றபோது, தன்னை டெல்லியில் வந்து சந்திக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவராக ஜிகே வாசன் நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. இதனை அடுத்து விரைவில் ஜிகே வாசன் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க இருப்பதாகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைய இருப்பதாகவும், அதற்கு பதிலாக அவருக்கு தமிழக பாஜக தலைவர் பதவியை பாஜக மேலிடம் தர இருப்பதாகவும் கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் தீவிர காங்கிரஸ் பின்னணியை கொண்ட ஜிகே வாசன், அதற்கு நேரெதிர் கொள்கையை உடைய பாஜக கட்சிக்கு தலைமை பொறுப்பை ஏற்பாரா? என்ற சந்தேகமும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் ஒருவேளை ஜிகே வாசன் பாஜக தலைமை பொறுப்பை ஏற்காவிட்டால், அவரை மத்திய அமைச்சராக்கும் திட்டமும் பாஜக மேலிடத்திற்கு இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் விரைவில் பாஜக-தமிழ் மாநில காங்கிரஸ் இணைப்பு நடக்கும் என்றே கூறப்படுகிறது

Previous articleதமிழுகம் முழுவதும் காவல் ஆய்வாளர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்தார்! காவல்துறை தலைவர் கே.திரிபாதி IPS
Next articleசிம்புவுக்கு நல்ல புத்தியை கொடுத்த ஐயப்பன்: மீண்டும் தொடங்கும் மாநாடு!