அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு12 தொகுதிகளா?

Photo of author

By Parthipan K

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு12 தொகுதிகளா?

தமிழ் மாநில காங்கிரஸ் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் இணைந்து கேப்டன் விஜயகாந்த் அவர்களை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. பின்னர் மக்கள் நல கூட்டணியிலிருந்து விலகி தனியாக பயணித்து வந்தது.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவுடனான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது.இந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றது. கூட்டணி உடன்படிக்கையின்படி ஜி கே வாசன் அவர்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்து பாஜக அரசு கௌரவித்தது.

இவ்வாறு தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் தமிழ் மாநில காங்கிரஸ் 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க 12 தொகுதிகள் கேட்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவிற்கு 21 தொகுதிகள் தர தயாராக உள்ளது. அதே போல தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட போவதாக அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.

நாளை இந்த கூட்டணி சம்பந்தமான ஒப்புதல் கையெழுத்து இடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.பட்டுக்கோட்டை, அரியலூர், ஈரோடு, காங்கேயம், வால்பாறை போன்ற தொகுதிகளில் தமாகாவிற்கு ஆதரவு உள்ளதால் அந்த தொகுதிகளை ஒதுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.