அகில உலக சூப்பர் ஸ்டார் அவர்களின் தமிழ்ப்படம்-3 அப்டேட்!!

0
73
Global Superstar's Tamil Movie-3 Update!!
Global Superstar's Tamil Movie-3 Update!!

சென்னை: சூப்பர் ஸ்டார் என்று பட்டம் மக்களால் ரஜினிகாந்துக்கு வைக்கப்பட்டது. ஆனால் தனக்கு தானே அகில உலக சூப்பர் ஸ்டார் என பெயர் சூட்டிகொண்டவர் நடிகர் சிவா. இவர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளி வந்த தமிழ்ப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. அந்த படத்தில் திரைத்துறையில் வெளியான திரைப்படங்களை வைத்து கிண்டல் செய்யும் விதமாக எடுக்கப்பட்டு இருந்தது.

அதனால் அந்தப்படம் நல்ல வெற்றியை அடைந்தது. அதனை அடுத்து 2018-ம் ஆண்டு அதே கூட்டணியில் உருவான தமிழ்ப்படம்-2 மக்களிடம் அதிகமாக வரவேற்பை பெறவில்லை. மேலும் அந்த படம் முடிந்த பின்பு சி.எஸ்.அமுதன் இயக்கிய ரத்தம் திரைப்படம் மக்களிடம் சரியான வெற்றி கிடைக்கவில்லை. அண்மையில் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த சிவா, ”தமிழ்ப்படம் 3 குறித்து ‘ஒய் நாட்’ தயாரிப்பு நிறுவனத்தின் ஸ்ரீகாந்த்திடம் பேசியுள்ளோம்.

கிட்டத்தட்ட 2 மணிநேரத்திற்கு மேலாக பேசி, 2025ல் தமிழ்ப்படம் 3 எடுக்க முடிவுசெய்துள்ளோம். ஒரு கதை எழுதி படம் பண்ணுவது நார்மல். ஆனால், 100 படங்களை பார்த்து கதை எழு துவது சவாலான விஷயம்” என்று தெரிவித்தார்.

Previous articleபாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் போர்!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.. தாலிபான் மையங்களில் தாக்குதல்!!
Next articleஅமேசான், ஹாட்ஸ்டரை ஓரங்கட்டிய நெட்ஃபிளிக்ஸ்!! புதிய வசதிகள் அறிமுகம் உற்சாகத்தில் ஓடிடி இணையதள வாசிகள்!!