குளு குளு தர்பூசணி பாயாசம் – சுவையாக செய்வது எப்படி?

0
215
#image_title

குளு குளு தர்பூசணி பாயாசம் – சுவையாக செய்வது எப்படி?

கோடை மாதத்தில் கிடைக்கும் வரப்பிரசாதமான தர்பூசணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. இப்பழத்தை சாப்பிட்டால் நிரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு இந்தப் பிரச்சினையிலிருந்து குணமாவார்கள். மேலும், உடல் பருமனால் அவதிப்பட்டு வருபவர்கள் தர்பூசணியை சாப்பிட்டால் உடல் எடையை கிடுகிடுவென குறைத்துவிட முடியும்.

தர்பூசணி பழசாறுடன் இளநீர் கலந்து அருந்த உடல் சூடு தணியும்.

தரபூசணியில் பொட்டாசியமும் அதிக அளவில் இருப்பதால், இப்பழம் நம்மை மாரடைப்பிலிருந்து காப்பாற்றும். இதயத்துடிப்பையும் சீராக்கும்.

சரி வாங்க.. தர்பூசணியில் எப்படி பாயாசம் செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

தர்பூசணி – 4 கப்

நெய் – தேவையான அளவு

முந்திரி, திராட்சை – தேவையான அளவு

சர்க்கரை – 200 கிராம்

பால் – 1 லிட்டர்

ஜவ்வரிசி – 100 கிராம் ( ஊற வைத்தது )

ஏலக்காய் தூள் – தேவையான அளவு

செய்முறை

முதலில், தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், ஜவ்வரிசியை நன்றாக கழுவி ஊற வைக்க வேண்டும்.

இதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் ஊற்றி அதில், முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதே நெய் பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள தர்பூசணியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை சேர்த்து மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். பால் காய்ந்ததும் அதில் ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து வேக விட வேண்டும்.

ஜவ்வரிசி கண்ணாடி பதத்திற்கு வெந்ததும், சர்க்கரை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பின்னர், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்க்க வேண்டும்.

இவை அனைத்தும் கெட்டியானதும் தர்பூசணி, ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி, சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து பிறகு பரிமாறினால் சுவையான தர்பூசணி பாயாசம் ரெடி.

 

Previous articleஜென்மத்துக்கும் வாயு தொல்லை வராமல் இருக்கு இந்த 7 வழிகளை பாலோ பண்ணுங்க!!
Next articleபுரட்டாசி மாதம் வந்திடுச்சினு வருத்தப்படாதீங்க.. பச்சை பயறை வைத்து “சைவ ஈரல்” வறுவல் செய்யலாம்!! இன்னைக்கே ட்ரை பண்ணுங்க!!