“மாணவர்களுக்கு ரூ 1000” உதவித்தொகை கிடைக்க உடனே பள்ளிக்கு செல்லுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Photo of author

By Rupa

 

“மாணவர்களுக்கு ரூ 1000” உதவித்தொகை கிடைக்க உடனே பள்ளிக்கு செல்லுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்றியமைத்து உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் என்று வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க உதவும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதே போல மாணவர்களின் உயர்கல்வி படிப்பிற்கு உதவும் நோக்கில் மாதம்தோறும் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. தற்பொழுது இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி “தமிழ் புதல்வன்” திட்டம் மூலம் ஆயிரம் பெற கட்டாயம் ஆதார் அட்டை அவசியம் என கூறியுள்ளனர். ஆதார் அட்டை இல்லாத மாணவர்கள் அருகிலுள்ள ஆதார் மையம் அல்லது இ சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்குமாறு கூறியுள்ளனர். மேற்கொண்டு தாங்கள் இருக்கும் பகுதியில் இ சேவை மையம் போன்றவை இல்லையென்றால் தாங்கள் படித்த கல்வி வாயிலாக ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளும் இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதிக்குள் தமிழ் புதல்வன் திட்டதில் மாணவர்கள் விண்ணப்பித்து அடுத்தடுத்து செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தமிழ் புதல்வன் திட்டமானது அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.