எவ்வளவு முறை துரத்தினாலும் போக மாட்டேன்றியே.. வைரலாகும் #GoBackModi ட்விட்டர் பதிவு!!

Photo of author

By Rupa

எவ்வளவு முறை துரத்தினாலும் போக மாட்டேன்றியே.. வைரலாகும் #GoBackModi ட்விட்டர் பதிவு!!

Rupa

Updated on:

#GoBackModi viral Twitter post! WelcomeModi in retaliation!

எவ்வளவு முறை துரத்தினாலும் போக மாட்டேன்றியே.. வைரலாகும் #GoBackModi ட்விட்டர் பதிவு!!

பிரதமர் இன்று ஒரு நாள் சுற்றுப்பயணம் ஆக தமிழகத்திற்கு வர உள்ளார். இந்நிலையில் , சென்னை டு மைசூர் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையை கர்நாடகாவில் தொடங்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து தனி விமான மூலம் தமிழ்நாடு வர இருக்கிறார்.

திண்டுக்கல்லில் நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். இவர் வருவதையொட்டி திண்டுக்கல் முழுவதும் பாஜக கொடி மற்றும் பேனர்களாகவே காட்சியளிக்கிறது. நேற்று இதனை அகற்ற கூறிய போதிலும் கூட பாஜகவினர் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருவதை ஒட்டி ட்விட்டர் மற்றும் இதர இணையதளங்களில் கோ பேக் மோடி என்ற ஹாஷ்டாக் வைரல் ஆகி வருகிறது.

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து, ஹிந்தி திணிப்பு என ஆரம்பித்து பல செயல்முறைகளில் மோடிக்கு எதிராக தான் உள்ளனர். இந்த வேலையில் மோடி தமிழகத்திற்கு வருவதால், ஹாஷ்டாக் ட்ரெண்டு ஆகி வருகிறது. இது மூடே எதற்கும் விதத்தில் தெரிவிக்கப்பட்ட வரும் வாசகமாக உள்ளது. இந்த கோ பேக் மோடியை எதிர்த்து பாஜகவினர் வெல்கம் மோடி என்ற வாசகத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் கோ பேக் மோடி தான் முன்னணியில் உள்ளது.