வீட்டில் லட்சுமி தேவி குடியேற… இதை செய்தால் போதும்!!
**காலை, மாலை இரு வேளையும் 6 மணி அளவில் விளக்கேற்ற வேண்டும்.
**காசுகளை தூக்கி எரிந்து விளையாட கூடாது.
**மாலை 6 மணி மேல் குளிக்க கூடாது.
**மாலை 6 மணி மேல் தலை வாரக் கூடாது.
**இடது கையில் பணம் வாங்க, கொடுக்க கூடாது.
**இரவு நேரத்தில் துணிகளை துவைக்க கூடாது.
**வாசற்படியில், நிலைப்படியில் உட்காரக் கூடாது.
**நீண்ட நேர தூக்கம், சோம்பேறி தனம் இருக்க கூடாது.
**கடன் வாங்குவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.
**அளவோடு ஆசைப்பட வேண்டும். பிறர் செய்த நன்றியை மறக்க கூடாது.
**தேவையற்ற வாக்குவாதம், எதிர்மறை பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்.
**பொறாமை குணம் இருக்கவே கூடாது.
**பழைய கிழிந்த உடைகள் மற்றும் காலணிகள் இருக்க கூடாது.
**உடைந்த கண்ணாடி பாட்டில்கள் இருக்க கூடாது.
**சிதைந்த, கிழிந்த, உடைந்த சாமி படங்கள் இருக்கக் கூடாது.
**செல்வம் நிலைக்க, பணம் பெருக, கொடுக்கல், வாங்கல் போன்ற செயல்களை செவ்வாய் கிழமை அன்று செய்ய கூடாது.
**பணம் கொடுக்க, வாங்குவதாக இருந்தாலும் வாசற்படியில் நின்று செய்ய கூடாது. உள்ளே அல்லது வெளியே நின்று கொண்டு தான் கொடுக்க வேண்டும்.
**வாசனை நிறைந்த சோம்பு, துளசி, பச்சை கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை பூஜை அறையில், பணம் மற்றும் நகை பெட்டியில் வைக்க வேண்டும்.
**வீட்டில் கெட்டை வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது.