ஓசூர் அருகே சாலையோரம் குவிந்து கிடந்த தங்க நாணயத்தை சேகரிப்பதற்காக பொதுமக்கள் திரண்டதால் , அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் காவல் குடியிருப்பில் , கர்நாடக மாநிலம் சர்ஜபுரம் செல்லும் சாலை அமைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று சாலையோரம் திடீரென்று சென்றபோது தங்க நாணயங்களை, யாரோ வீசி சென்றிருப்பதாக தகவல் பரவியது. இதனால் அவ்விடத்திற்கு 200 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு சேகரிக்கத் தொடங்கினார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த தகவலறிந்து வந்த பாகலூர் காவல்துறையினர், போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் அவர்கள் சேகரித்த தங்க நாணயங்களை கைப்பற்றினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அவர்கள் சோதனையிட்டதில் அது தங்க நாணயம் இல்லை என்றும் பித்தளை அல்லது கவரிங் என்பது குறித்து விசாரித்து வருவதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும், பதற்றமும் நிலவியது.