ரிசர் வங்கி தங்கபத்திரத்தை டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. இத்திட்டம் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு சிறந்த வழி எனப்படுகிறது. தங்கத்தின் நான்காம் கட்ட விநியோகம் நாளை 12.7.2021 முதல் தொடங்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்க பத்திரங்கள் கிராம் 4807ரூபாய் என இந்த முறை ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. குறைந்த செலவில் தங்கத்தில் முதலீடு செய்ய தங்க பத்திர திட்டம் மிகவும் சிறந்ததாக பார்க்கப்படுகிறது. இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், டிஜிட்டல் முறையில் தங்கத்தை வாங்குவதற்கு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு கிராமை டிஜிட்டல் முறையில் 1757 ரூபாய்க்கு வாங்கலாம். தங்கப்பத்திரத்திட்டம் 2015ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக தங்கத்தின் மதிப்பு உயர பணத்தின் மதிப்பும் உயரும். இது மட்டுமல்லாமல் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி வருமானம் கிடைக்கும்.
இதற்கு எந்த ஒரு ஜிஎஸ்டியும் கிடையாது. இந்த திட்டத்திற்கு முதலீட்டாளர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் பல சலுகைகளை வழங்கி வருகிறது.