ஆந்திராவில் உள்ள கடற்கரையான உப்பாடா பகுதியில் நிவார் புயலுக்குப் பின் நிறைய தங்கம் கிடைத்திருக்கிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையை புரட்டி போட்ட இந்த புயலானது ஆந்திர மக்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுத்துள்ளது. இது குறித்த முழு விவரத்தினை இந்த பதிவில் காண்போம்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா வருவாய் கூட்டத்திற்குள் அமைந்திருக்கக் கூடியது இந்த உப்பாடா கடற்கரை. இந்த கடற்கரையில் தான் நிவார் புயலுக்கு பிறகு நிறைய தங்கம் கிடைத்து வருகிறது தினமும் ஏராளமான மக்கள் இந்த கடற்கரையில் தங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்திருக்கிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 23 முதல் 27 வரை புதுச்சேரி மற்றும் மரக்காணம் இடையே கரையை கடந்தது இந்த நிவார் புயல். இந்த புயலின் பாதிப்புகள் புதுச்சேரி சென்னை மற்றும் ஆந்திராவில் போன்ற பல இடங்களில் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தினை ஆட்டிப் பார்த்த இந்த புயலினால் ஆந்திரா தற்பொழுது பயனடைந்து வருவதாக வெளியாகி இருக்கும் இந்த செய்தி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
புயலின் காரணமாக உப்பாடா கடற்கரையில் நடந்த நிகழ்வுகள் :-
இந்த கடற்கரையில் கடல் நீர் சீற்றத்துடன் காணப்பட்டு அதன் பின் அமைதி நிலைக்கு மாறி இருக்கிறது. அந்நேரத்தில் கடற்கரையில் இருந்து தங்கமணிகள் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது மீண்டும் இந்த கடற்கரை மணலில் இருந்து தங்க தாது துகள்கள் சிறிய தங்க நகைகள் கிடைக்கிறது இதனால் பெருமக்கள் பலரும் இந்த கடற்கரைக்கு வந்து தங்கம் தேடும் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் உப்பாடா, சுரதா பேட்டை மற்றும் அதனை சுற்றிய இடங்களில் வசிக்கக்கூடிய மக்கள் மணலை தோண்டி சல்லடை போட்டு தங்கத்தை சேகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இங்க தங்கம் கிடைப்பது என்பது அவரவர்களுடைய அதிர்ஷ்டத்தை பொறுத்ததே.
இந்த புயலின் மூலம் தங்கம் கிடைப்பது ஏற்கனவே புயலினால் கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட வீடுகள் கோவில்கள் போன்றவற்றில் இருந்திருக்க கூடிய தங்கமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த கடற்கரையில் தற்பொழுது பலருக்கும் தங்கம் கிடைத்து வரும் நிலையில் இந்த கடற்கரையை சுற்றுலாத்தலமாக மாற்ற ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.