2 கோடிக்கு தங்க நகைகள்.. ராஜஸ்தானை கலக்கும் பீடா கடைக்காரர்..!!

Photo of author

By Vijay

2 கோடிக்கு தங்க நகைகள்.. ராஜஸ்தானை கலக்கும் பீடா கடைக்காரர்..!!

Vijay

Gold jewelery for 2 crore.

2 கோடிக்கு தங்க நகைகள்.. ராஜஸ்தானை கலக்கும் பீடா கடைக்காரர்..!!

ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் பீடா கடைக்காரர் ஒருவர் சுற்றுலா பயணிகளை வசீகரித்து வருகிறார். அதன் பின்னணி என்ன என்று பார்க்கலாமா? அங்குள்ள சத்தா பஜாரில் முல்சா புல்சா எனும் பீடா கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையை பூல்சந்த் என்பவர் நடத்தி வருகிறார். இவரை தான் சுற்றுலாப் பயணிகளும் அப்பகுதி உள்ளூர்வாசிகளும் ஆச்சரியமாக பார்த்து செல்கிறார்கள்.

அதற்கு காரணம் இவர் அணிந்துள்ள தங்க நகைகள். பொதுவாக ஆண்கள் அதிகளவில் தங்க நகைகள் அணிவதில்லை. அப்படியே அணிந்தாலும் ஒன்றிரண்டு நகைகள் தான் அணிவார்கள். ஆனால் பூல்சந்த் அவர் உடலில் இரண்டு கிலோவிற்கும் அதிகமான தங்க நகைகளை அணிந்துள்ளார். இதன் மொத்த மதிப்பு 2 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

தங்க செயின்கள், பிரேஸ்லெட்கள் மற்றும் காதணிகள் என உடம்பு முழுக்க தங்கத்தால் ஜொலிக்கும் பூல்சந்த் பீடா தயாரிப்பதை காணவே ஒரு கூட்டம் கூடுகிறது. இவர் கடையில் பீடா வாங்க கூட்டம் வருகிறதோ இல்லையோ இவரை பார்ப்பதற்கென தனியாக கூட்டம் அலைமோதி வருகிறது. பூல்சந்த் குடும்பம் பாரம்பரியமாக இந்த பான் கடையை நடத்தி வருகிறார்கள்.

தற்போது அவர் வைத்திருக்கும் கடை கூட கிட்டத்தட்ட 93 ஆண்டுகள் பழமையான கடை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு அனைத்து வகையான பீடாக்களும் 15 முதல் 20 ரூபாய் என மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி பூல்சந்தை காணவும் தினமும் ஏராளமான நபர்கள் குவிந்து வருவதால் இவர்களின் வியாபாரமும் நன்றாக நடப்பதாக கூறுகிறார்கள்.