1 லட்சத்தை நெருங்கிய தங்கம் விலை!! (ஏப்ரல் 23) இன்று ரூ.92,910 க்கு விற்பனை!!

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய சூழலில் ஏப்ரல் 23 2025 ஆன இன்று 92 ஆயிரம் ரூபாயை அதாவது கிட்டத்தட்ட 93 ஆயிரம் வரை 10 கிராம் தங்கமானது விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மிகப்பெரிய சேமிப்பு முதலீடாக இருந்த நிலையில் தற்போது தங்கத்தில் சேமிப்பு என்பது நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய கனவாக மாறிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இன்றைய தங்கம் விலை :-

✓ 24 கேரட்

1 கிராம் – ரூ.10,136
8 கிராம் – ரூ.81,088
10 கிராம் – ரூ. 1,01,360

✓ 22 கேரட்

1 கிராம் – ரூ.9,291
8 கிராம் – ரூ. 74,088
10 கிராம் – ரூ. 92,910

✓ 18 கேரட்

1 கிராம் – ரூ. 7602
8 கிராம் – ரூ. 60,816
10 கிராம் – ரூ. 76,020

தங்கத்தின் விலை நிலவரம் ஆனது நாடு முழுவதும் இருக்கக்கூடிய நகரங்கள் மற்றும் பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தினம் தினமும் மாறுபட்டு வருகிறது. எனவே தங்கம் வாங்க செல்லும் முன்பு அன்றைய தங்கத்தின் விலை என்ன என்பதை தெரிந்து கொண்டு மக்கள் தங்கம் வாங்குவது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

சேலம் தமிழ்நாட்டில் வெள்ளி விலை நிலவரம் :-

1 கிராம் வெள்ளி 104 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்படும் நிலையில் 10 கிராம் வெள்ளி 1042 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளியானது 1,10,900 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையை பொறுத்த வரை ஏப்ரல் மாதத்தில் உயர்வு தாழ்வு என மாறி மாறி வரக்கூடிய நிலையில் இன்றைய வெள்ளி விலை 104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.