தங்கத்தின் விலை சரிந்தது! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்!

Photo of author

By Kowsalya

தங்கத்தின் விலை சரிந்தது! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே குறைந்து வருகிறது நேற்று ஏறு முகமான தங்கம் இன்று சற்று குறைந்துள்ளது.

 

கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருந்த நிலையில் அனைத்தும் முடங்கிப் போய்க் கிடந்த நிலையில் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

 

தொடர்ந்து ஏற்றத்தை கண்ட தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாகவே குறைந்து வந்த நிலையில் இன்று கிராமிற்கு 21 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 168 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்து ரூ.5166-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.168 குறைந்து ரூ.41328-க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 ரூபாய் குறைந்து ரூ.5424 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலைரூ.176 குறைந்து ரூ.43392-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி கிராமிற்கு ரூ. 2.70 குறைந்து ஒரு கிராம் 74.40-விற்க்கும், ஒரு கிலோ ரூ.74400 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

குறைய தொடங்கிய நிலையில் மீண்டும் ஆட்டம் காட்டி ஏறத் தொடங்கிய தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.என்னதான் தங்கம் விலை குறைந்து வந்தாலும் இன்னும் மக்களுக்கு எட்டாக் கனியாகும் தங்கம்.