GOLD வாங்க இது தான் சரியான டைம்!! உடனே விரையுங்கள்.. அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

Photo of author

By Divya

GOLD வாங்க இது தான் சரியான டைம்!! உடனே விரையுங்கள்.. அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை!!

இந்த வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை இறக்கத்துடன் விற்பனையாகி வருகிறது. தற்பொழுது மாசி மாதம் தொடங்கி விட்டதால் சுப நிகழ்வுகளுக்காக தங்கம் வாங்க நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

அதுமட்டும் இன்றி தங்கம் விலை சரிவில் இருப்பதால் நகை பிரியர்கள் தங்கம் வாங்குவதற்கு நகைக்கடைகளை நோக்கி படையெடுப்பர்.நேற்று 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதன் விலை மேலும் குறைந்து இருக்கின்றது.

சென்னையில் நேற்று 1 கிராம் ரூ.5,810க்கும் 1 சவரன் ரூ.46,480க்கும் விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு ரூ.60 குறைந்து 1 கிராம் ரூ.5,750க்கும் 1 சவரன் ரூ.46,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.65 குறைந்து 1 கிராம் ரூ.6,273க்கும் சவரனுக்கு ரூ.520 குறைந்து 1 சவரன் ரூ.50,184க்கும் சவரனுக்கும் விற்பனையாகின்றது.

நேற்று வெள்ளி விலையில் மாற்றம் இன்றி முந்தின நாள் விலைப்படி விற்பனையான நிலையில் இன்று அதன் விலை சற்று குறைந்து இருக்கின்றது. அதன்படி கிராமுக்கு ரூ.1.50 குறைந்து 1 கிராம் ரூ.75.50க்கும் 1 சவரன் ரூ.75,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.