மாநிலங்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டி – காங்கிரஸ் அறிவிப்பு!

0
157
#image_title

மாநிலங்களவை தேர்தலில் சோனியா காந்தி போட்டி – காங்கிரஸ் அறிவிப்பு!

 

இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை மற்றும் மக்களவை என இரு பகுதிகள் உள்ளது. இதில் மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் மற்றும் மக்களவையில் 543 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.

 

இந்நிலையில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவடைந்து மக்களவை தேர்தல் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற இருக்கின்றது. மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும்… ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறது.

 

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை பிரச்சார கூட்டம், தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் பட்டியல் என்று அடுத்தடுத்து வேகமாக செயல்பட்டு வருகிறது. காங்கிரஸின் இந்தியா கூட்டணியை பொறுத்தமட்டில் கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு பிரச்சனை பூதகரமாகி உள்ளது. கூட்டணியில் அங்கம் வகித்த முக்கிய கட்சிகளான அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் கழண்டு விட்டது. போகின்ற போக்கை பார்த்தால் இந்திய கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது எட்டா கனியாகி Sவிடும் போல… இவ்வாறு இருக்க மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சி தலைமை வெளியிட்டு இருக்கின்றது.

 

ராஜஸ்தானில் இருந்து சோனியா காந்தி, பீகாரில் இருந்து அகிலேஷ் பிரசாத் சிங், இமாச்சல் பிரதேசத்தில் இருந்து அபிஷேக் மனு சிங்வி, மகாராஷ்டிராவில் இருந்து சந்திரகாந்த் ஹந்தோர் ஆகியோர் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களாக களம் காண உள்ளனர் என்று அக்கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றது.

 

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் காட்டாத சோனியா காந்தி அவர்கள் மாநிலங்களை எம்பியாக திட்டமிட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. வருகின்ற 27 ஆம் தேதி மாநிலங்களை தேர்தல் நடைபெற இருப்பதால் இன்று(பிப்ரவரி 14) தான் போட்டியிட உள்ள ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

author avatar
Jeevitha