ஜெட் வேகத்தில் பறக்கும் தங்கத்தின் விலை! எங்கு போய் நிற்கும்? இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்!

Photo of author

By Kowsalya

ஜெட் வேகத்தில் பறக்கும் தங்கத்தின் விலை! எங்கு போய் நிற்கும்? இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே செல்கிறது. எங்கு போய் முடியும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று.அமெரிக்கப் பொருளாதாரம் மிகவும் அடைபட்டு இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ரூ.38,000லிருந்து தொடங்கி இன்றுவரை ரூ.43,000 வரை வந்துள்ளது எங்கு நிற்கும் என்பது யாருக்கும் தெரியாது.

தற்பொழுது ஆபரண தங்கத்தின் ஒரு கிராம் விலை நேற்று ரூ.5324 இன்று ரூ. 50 அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5374 வரை விற்கப்படுகிறது.ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து 22 காரட் தங்கத்தின் விலை ரூ.42992 ஆக விற்கப்படுகிறது.

24 காரட் தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூ.53 உயர்ந்து ரூ.5642 இருக்கு விற்கப்படுகிறது.ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலையானது ரூ.424 அதிகரித்து ரூ.45136 ஆக விற்கப்படுகிறது.

வெள்ளி ஒரு கிராமிற்க்கு ரூ.2.40 அதிகரித்து 81.60-விற்க்கும், ஒரு கிலோ ரூ.81,600 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

இந்த நிலை நீடித்தால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலையானது லட்சத்தை கடக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனாவால் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இப்படியே போனால் ஏழை எளிய மக்கள் தங்கத்தை நினைத்துக்கூட பார்க்க முடியாது.