தங்கத்தின் விலை குறைவு! இல்லத்தரசிகளுக்கு இன்பதிர்ச்சி!
தங்கம் விலை அதிகரிக்க முதல் காரணம் மக்கள் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏதேனும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கி விட்டனர்.அதனால் தங்கம் தொடர்ந்து ஏறு முகத்தையே சந்தித்தது.அதனை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர்.
அதனால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது. இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உச்சம் பெற்றது. அப்போது ஒரு கிராம் ரூ 5,505 க்கு விற்பனையானது. ஒரு பவுன் ரூ 44,040 க்கும் விற்பனையானது.
அதனை தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது. சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ளது.ஒரு கிராம் ரூ 5,383 க்கு விற்பனையாகின்றது. ஆனால் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ 64 குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ 43,000 க்கு விற்பனையாகின்றது.
ஆனால் தங்கத்தின் விலையில் மாற்றம் இருந்தாலும் வெள்ளி விலையில் கடந்த மூன்று நாட்களாகவே எந்த மாற்றமும் இல்லாலம், ஒரு கிராம் ரூ74 க்கும், ஒரு கிலோ ரூ 74,000 க்கும் விற்பனையாகி வருகின்றது.