தங்கம் விலை மீண்டும் உயர்வு! இனி கடைக்கு போக வாய்ப்பில்லை என புலம்பும் இல்லத்தரசிகள்!

0
228
Gold price rise again! Housewives lamenting that there is no chance to go to the store!
Gold price rise again! Housewives lamenting that there is no chance to go to the store!

தங்கம் விலை மீண்டும் உயர்வு! இனி கடைக்கு போக வாய்ப்பில்லை என புலம்பும் இல்லத்தரசிகள்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் அதிகளவு தங்கத்தின் மீது தான் முதலீடு செய்தனர்.அதனால் தங்கத்தின் விலை ஏறுமுகத்தையே சந்தித்தது,அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பினார்கள்.அதன் காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே காணப்பட்டது.

மேலும் கடந்த தீபாவளி பண்டிகை முதல் கடந்த மாதம் முடிந்த பொங்கல் பண்டிகை வரை தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்தது.இருப்பினும் கடந்த வாரங்களில் தங்கத்தின் விலை சற்று குறைய தொடங்கியது.

இந்நிலையில் நேற்று காலை நிலவரப்படி ஒரு பவுனுக்கு ரூ 40 விலை உயர்ந்தது.22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4542 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அந்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 5 உயர்ந்துள்ளது.பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்வின் காரணமாக ஆபரண தங்கம் விலை கடந்த 2 ஆம் தேதி வரலாறு காணாத வகையில் ரூ 44 ஆயிரத்தை நெருங்கியது.

இந்நிலையில் இன்று பவுனுக்கு ரூ 240 உயர்ந்தது.கிராமுக்கு ரூ 30 உயர்ந்தது.ரூ 5,365 ஆக விற்பனையானது.மேலும் ஒரு பவுனுக்கு ரூ 240 அதிகரித்தது ரூ 42,920 ஆக விற்பனையானது. அதனைத்தொடர்ந்து வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ 74 ஆகவும் ,ஒரு கிலோ ரூ 74 ஆயிரமாகவும் விற்பனையாகின்றது.

Previous articleஇபிஎஸ் வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவா? அதிமுக அவைத் தலைவர் பரபரப்பு கடிதம்!
Next articleபாரத் பஜாருக்கு பதில் சைனா பஜார்! எங்கே போனது மேக் இன் இந்தியா! – ஒன்றிய அரசை தாக்கிய முதல்வர்