மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை..! இன்றைய நிலவரம்..!
கடந்த சில வாரங்களாக ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலையால் நகைப் பிரியர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். சாமானியர்கள் இனி தங்கத்தை கனவில் கூட வாங்க முடியாது போல… தங்கம் விலை கிட்டத்தட்ட ரூ.6 ஆயிரத்தை நெருங்கி விட்ட நிலையில் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி ஆகியவற்றை சேர்த்தால் 1 கிராம் தங்க நகைக்கு ரூ.7000 வரை கொடுத்ததும் வாங்கும் சூழல் ஏற்பட்டு விட்டது.
தங்கம் கிராமுக்கு ரூ.10, ரூ.15 ஆக அதிகரித்து வந்த நிலையில் இன்று ரூ.30 அதிகரித்து இருக்கின்றது.
22 கேரட் கோல்ட்: நேற்று ஒரு கிராம் ரூ.5,850க்கு விற்ற நிலையில் இன்று ரூ.30 அதிகரித்து ரூ.5,880க்கு விற்பனையாகி வருகின்றது. சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.47,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் கோல்ட்: நேற்று ஒரு கிராம் ரூ.6,382க்கு விற்ற நிலையில் இன்று ரூ.33 அதிகரித்து ரூ.6,415க்கு விற்பனையாகி வருகின்றது. 8 கிராம் தங்கம் ரூ.264 அதிகரித்து ரூ.51,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி: நேற்று விலைமாற்றம் இன்றி 1 கிராம் ரூ.78க்கும், 1000 கிராம் ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 2 காசுகள் குறைந்து 1 கிராம் ரூ.77.80க்கும், 1000 கிராம் ரூ.77,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகைப்பிரியர்கள் மற்றும் சாமானியர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.