இறங்க மறுக்கும் தங்கம் விலை!! இன்று பவுனுக்கு எவ்வளவு உயர்ந்து இருக்கிறது தெரியுமா?

0
168
#image_title

இறங்க மறுக்கும் தங்கம் விலை!! இன்று பவுனுக்கு எவ்வளவு உயர்ந்து இருக்கிறது தெரியுமா?

சென்னை,

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 அதிகரித்து விற்பனையாகி வருகிறது.

மார்ச் மாத தொடக்கத்தில் தங்கம் ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்தை கடந்தது.அதில் இருந்து தங்கம் விலை இறங்காமல் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

போகின்ற போக்கை பார்த்தால் சாமானியர்கள் தங்கம் வாங்குவது எளிதற்ற ஒன்றாக மாறிவிடும் போல.ஆனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் நேரம் இது.

நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.6,140க்கும் ஒரு சவரன் ரூ.49,120க்கும் விற்பனையானது.இந்நிலையில் இன்று அதன் மேலும் அதிகரித்து இருக்கிறது.

அதன்படி,சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.760 அதிகரித்து,ரூ.49,880க்கும்,ஒரு கிராம் ரூ.95 அதிகரித்து ரூ.6,235க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல் 24 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.832 அதிகரித்து ரூ.54,416க்கும் விற்பனையாகின்றது.

மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.81.50க்கும்,ஒரு கிலோ ரூ.81,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.