தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

0
109

தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவு! இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே குறைந்து வருகிறது. இன்றும் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் மேல் குறைந்து தங்கம் விற்கப்படுகிறது.

கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருந்த நிலையில் அனைத்தும் முடங்கிப் போய்க் கிடந்த நிலையில் பங்குச்சந்தை மற்றும் தங்கம் வெள்ளி விலைகளில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வந்தன. ஆனால் இப்பொழுது கடந்த ஒரு சில வாரமாக தங்கம் குறைய தொடங்கியுள்ளது.

தொடர்ந்து உச்சத்தை கண்ட தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாகவே குறைந்து கொண்டு செல்லும் நிலையில், இன்று கிராமிற்கு 126 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1008 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.126 குறைந்து ரூ.5040-க்கு விற்கப்படுகிறது.          22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1008 குறைந்து ரூ.40320-க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.132 ரூபாய் குறைந்து ரூ.5292 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1056 குறைந்து      ரூ.42336-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி கிராமிற்கு ரூ. 1.70 குறைந்து ஒரு கிராம் 72.70-விற்க்கும், ஒரு கிலோ             ரூ.72700 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

குறைய தொடங்கிய நிலையில் மீண்டும் ஆட்டம் காட்டி ஏறத் தொடங்கிய தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.என்னதான் தங்கம் விலை குறைந்து வந்தாலும் இன்னும் மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகவே பார்க்கப்படுகிறது.

 

 

 

 

Previous articleஎஸ்.பி.பிக்கு அளிக்கும் சிகிச்சை விவரம்!!
Next articleமோடிக்கு நன்றி தெரிவித்தாரா தோனி?