தங்கம் விலை கிடுகிடு குறைவு!!

Photo of author

By Parthipan K

தங்கம் விலை பல மாதங்களாகவே நினைத்து பார்க்க முடியாத அளவு ஏற்றத்துடன் அவ்வப்போது குறைந்தும் காணப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.

தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கடந்த 30ஆம் தேதி முதல் அதிகரித்து வந்த தங்கத்தின் விலை தற்போது மெதுவாக குறைய ஆரம்பித்துள்ளது.

தங்கத்தின் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 1805 ரூபாய்க்கும்,சவரன் 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 38,440க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்று காலை நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 13 குறைந்து ஒரு கிராம் 4292 ரூபாய்க்கும், சவரன் 104 குறைந்து 38,333 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

மாலையில் மேலும் ஏற்பட்ட சரிவில் கிராமுக்கு 51 ரூபாய் குறைந்து 4,754 ரூபாய்க்கும், சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து 38,032 க்கும் விற்கப்படுகிறது. இந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 1048 ரூபாய் குறைந்து தங்கம் வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.