அதிரடி காட்டும் GOLD ரேட்! இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு!

0
217
#image_title

அதிரடி காட்டும் GOLD ரேட்! இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு!

கடந்த இரு தினங்களாக தங்கம் விலை மளமளவென உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் விலை இறங்கிய தங்கம் மீண்டும் உயந்து இருக்கின்றது. தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் நகைப் பிரியர்கள் மற்றும் அதன் தேவை இருப்போர் கலக்கமடைந்து இருக்கின்றனர்.

சென்னையில் நேற்று 1 கிராம் ரூ.5,760க்கும் 1 சவரன் ரூ.45,080க்கும் விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு ரூ.20 அதிகரித்து 1 கிராம் ரூ.5,780க்கும் 1 சவரன் ரூ.46,240க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.21 அதிகரித்து 1 கிராம் ரூ.6,305க்கும் சவரனுக்கு ரூ.168 அதிகரித்து 1 சவரன் ரூ.50,440க்கும் விற்பனையாகின்றது.

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.77க்கும் 1 கிலோ வெள்ளி ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அதன் விலை அதிகரித்து இருக்கின்றது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.78க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.