தங்கம் வெள்ளி விலை நிலவரம்!! தொடர்ந்து குறையும் தங்கம் விலை!! வெள்ளி ஒரே நாளில் 400 ரூ குறைந்தது !!
இந்த வாரம் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை சற்று சரிந்து தான் வருகிறது. கடந்த 4 நாட்களில் தங்கம் விலையானது தொடர்ந்து சரிந்து தற்போது மொத்தம் 320ரூபாய் சரிந்துள்ளது. மேலும் நேற்றைய விலையை ஒப்பிடும் போது இன்று சந்தை நிலவரப்படி ஆபரண தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 3 குறைந்து உள்ளது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 5குறைந்து உள்ளது. இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1 கிராம் ரூ. 4,533 ஆகவும் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1 சவரனுக்கு ரூ.36,264 ஆகவும் உள்ளது. இது நேற்றைய விலையை விட ரூ 24 குறைந்துள்ளது. 24 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.4,945 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை 1 சவரன் ரூ. 39,560 ஆகவும் உள்ளது. இது நேற்றைய விலையை விட ரூ.40 குறைந்துள்ளது.
இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 45,330 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 49,450 ஆகவும் உள்ளது. டெல்லியில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 47,150 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 51,430 ஆகவும் உள்ளது. இன்று மும்பையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 47,380 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 48,380 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 72.70 ஆகவும் 10 கிராம் வெள்ளி விலை ரூபாய் 727 ஆகவும் 1 கிலோ வெள்ளி விலை ரூபாய் 72,700 ஆகவும் விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையைக் காட்டிலும் 400 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.72,700 ஆகவும் உள்ளது.டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.67,600 ஆகவும், புனே, அகமதாபாத், ஜெய்பூர் ஆகிய மாநிலங்களில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூபாய். 67,600 ஆகவும் விற்கப்படுகிறது.