தங்கம் வெள்ளி விலை நிலவரம்!! தொடர்ந்து 6 வது நாளாக குறையும் தங்கம் விலை!! வெள்ளி ஒரே நாளில் 800 ரூ குறைந்தது !!

Photo of author

By Preethi

தங்கம் வெள்ளி விலை நிலவரம்!! தொடர்ந்து 6 வது நாளாக குறையும் தங்கம் விலை!! வெள்ளி ஒரே நாளில் 800 ரூ குறைந்தது !!

இந்த வாரம் தொடக்கத்திலிருந்தே தங்கம் விலை சற்று சரிந்து தான் வருகிறது. கடந்த 6 நாட்களில் தங்கம் விலையானது தொடர்ந்து சரிந்து தற்போது மொத்தம் 390 ரூபாய் சரிந்துள்ளது. மேலும் நேற்றைய விலையை ஒப்பிடும் போது இன்று சந்தை நிலவரப்படி ஆபரண தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 7 குறைந்து உள்ளது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7 குறைந்து உள்ளது. இந்தியாவில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1 கிராம் ரூ. 4,526 ஆகவும் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1 சவரனுக்கு ரூ.36,208 ஆகவும் உள்ளது. இது நேற்றைய விலையை விட ரூ 24 குறைந்துள்ளது. 24 கேரட் தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.4,938 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை 1 சவரன் ரூ. 39,504 ஆகவும் உள்ளது. இது நேற்றைய விலையை விட ஒரு சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது.

இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 45,260 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 49,380 ஆகவும் உள்ளது. டெல்லியில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 47,040 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 51,320 ஆகவும் உள்ளது. இன்று மும்பையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 46,950 ஆகவும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ 47,950 ஆகவும் உள்ளது.

வெள்ளி விலை:
இன்றைய சந்தை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 72.30 ஆகவும் 10 கிராம் வெள்ளி விலை ரூபாய் 723 ஆகவும் 1 கிலோ வெள்ளி விலை ரூபாய் 72,300 ஆகவும் விற்கப்படுகிறது. இது நேற்றைய விலையைக் காட்டிலும் ஒரு கிலோ வெள்ளி விலையானது 800 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.72,300 ஆகவும் உள்ளது.டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூரில் வெள்ளி விலை ஒரு கிலோ ரூ.67,600 ஆகவும், புனே, அகமதாபாத், ஜெய்பூர் ஆகிய மாநிலங்களில் ஒரு கிலோ வெள்ளி விலை ரூபாய். 67,600 ஆகவும் விற்கப்படுகிறது.