தங்கம் வாங்குவது என்பது நடுத்தர மக்களுக்கு ஒரு மிகப்பெரிய கனவாக மாறி வருகிறது. அதற்கு காரணம் கிடு கிடுவென உயர்ந்த தங்க விலை.
கிராம் தங்கம் என்பதே மக்களுக்கு எட்டாத கனியாக மாறி வருகின்றது.
மேல்தட்டு மக்களிடமே நகை புழக்கம் அதிகமாக இருக்கிறது.
ஒரு பவுன் நகை ரூ.36 ஆயிரமாக இருந்த வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கத்தின் விலை 36 ஆயிரத்திற்கு கீழ் வந்தது. இது மக்களுடைய ஒரு கணிசமான நகை வாங்கும் பழக்கம் அதிகரித்தது.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக நகை விலை 36 ஆயிரத்தை தாண்டி இருந்தது.
மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது போல் நகை விலை 36 ஆயிரத்திற்கும் குறைவாக வந்துள்ளது.
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.224 குறைந்து ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 64-க்கும், ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 508-க்கும் விற்றது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.800 குறைந்து ரூ.69 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.20-க்கு விற்றது.