மக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கும் தங்கம். இன்றைய தங்கத்தின் விலை!

Photo of author

By Kowsalya

மக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கும் தங்கம். இன்றைய தங்கத்தின் விலை!

Kowsalya

மக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கும் தங்கம். இன்றைய தங்கத்தின் விலை!

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது.

கொரோனாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு இருந்த நிலையில் அமெரிக்க டாலரின் விலை மிகவும் குறைந்த நிலையில் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது.

தொடர்ந்து அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரத்தை தொட்டுக் கொண்டே இருந்தது. எட்டாக் கனியான தங்கத்தை கண்டு மக்கள் வெறுத்துப் போயிருந்தனர்.

அதனால் மக்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கும் படி தங்கத்தின் விலையானது இன்று சற்று குறைந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.36 குறைந்து ரூ.5380-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.288 குறைந்து ரூ.43040-க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 ரூபாய் குறைந்து ரூ.5649 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலைரூ.304 குறைந்து ரூ.45192-க்கு விற்கப்படுகிறது.

 

வெள்ளி ஒரு கிராமிற்க்கு ரூ.0.20 குறைந்து 83.40-விற்க்கும், ஒரு கிலோ ரூ.83,400 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

இதை குறித்து நிபுணர்கள் கூறுகையில் தங்கம் மீண்டும் உயரவே வாய்ப்புள்ளது எனவும்,இன்னும் சில நாட்களில் அரை லட்சத்தை கடக்கும் எனவும் கூறுகின்றனர்.