தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!!

0
305

தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!! குவியும் பாராட்டுக்கள்!!

ஒலிம்பிக்ஸ் போட்டி மட்டும் மட்டுமல்லாது சர்வதேச அளவிலான போட்டிகளிலும் இந்திய வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். அந்த வகையில், ஹங்கேரி நாட்டு புடாபெஸ்டில் நடைபெறும் உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் 73 கிலோ எடைப் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற பிரியா மாலிக், பெலாரஸ் என்ற வீராங்கனை இடம் மோதினார். ஆரம்பத்திலிருந்தே ஆவேசமாகவும் விளையாடிய மாலிக் ஆட்டத்தின் முடிவில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

முதலிடம் பிடித்த பிரியா மாலிக் இந்தியாவிற்காக தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்து உள்ளார். முன்னதாக 43 கிலோ எடைப் பிரிவில் தன்னு தங்கம் வென்றிருந்தார். ஒலிம்பிக்ஸில் பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்ததை தொடர்ந்து, தற்பொழுது பிரியா மாலிக்கும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் தங்கப்பதக்கத்தை வென்று இருக்கின்றார்.

ஹரியானாவை சேர்ந்த பிரியா மாலிக்கிற்கு அந்த மாநில விளையாட்டு துறை அமைச்சர் சந்தீப் சிங் வாழ்த்துகளை தெரிவித்து இருக்கின்றார். உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 73 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற ஹரியானா மகள் பிரியா மாலிக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

பிரபலங்கள் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைவரும் பிரியா மாலிக்கின் சாதனையை பாராட்டி வருகின்றனர்.

Previous articleகுட்நியூஸ்: நியாயவிலைக்கடைகளில் மக்களுக்கு 4000 ரூபாய்!! தமிழக அரசு அதிரடி!!
Next articleபுளியந்தோப்பில் ஒரேநாளில் பல கொள்ளை சம்பவம்! ஆய்வாளர் உட்பட பாதிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here