ஒரே நாளில் மோதும் “குட் பேட் அக்லி” மற்றும் “இட்லி கடை” திரைப்படம்!!

Photo of author

By Vinoth

ஒரே நாளில் மோதும் “குட் பேட் அக்லி” மற்றும் “இட்லி கடை” திரைப்படம்!!

Vinoth

"Good Bad Ugly" and "Itli Kaada" movie clashing on the same day!!

சென்னை: நடிகர் அஜித் குமார் அவர்களின் 63-வது திரைப்படம் தற்போது நடித்து வருகிறார். அந்த படத்தின் பெயர்  குட் பேட் அக்லி” என சூட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த வருடம் முதல், மற்றும் இரண்டாம் லுக் புகைப்படம் வெளியிடப்பட்டு அதிகமாக சமூக வலைதளங்களில் பரவியது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார்.

மேலும் இந்த “குட் பேட் அக்லி” திரைப்படம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு முதலில் தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க இருந்த நிலையில் சில காரணங்களால் அதிலிருந்து விலகினர். ஆனால் தற்போது குட் பேட் அக்லி”  படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்திற்க்கான டப்பிங் சென்ற வாரம் நடிகர்  அஜித் குமார் முடித்துள்ளார். தற்போது குட் பேட் அக்லி” படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக ரிலிஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி இந்த வருடம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி  வெளியாகும் என அறிவித்துள்ளது.

மேலும் அஜித் படத்திற்கு போட்டியாக தனுஷ் நடித்த இட்லி கடை அவரது 52-வது திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ராஜ் கிரண் மற்றும் நித்யா மேனன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.  மேலும் இந்த இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் வெளியாவதால் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்ப்பு கிடைக்கும் என எதிர்பாக்கபடுகிறது.