உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த நெய்!! தப்பி தவறியும் இந்த உணவுகளில் ஊற்றி சாப்பிட்டுவிடாதீர்!!

Photo of author

By Divya

உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த நெய்!! தப்பி தவறியும் இந்த உணவுகளில் ஊற்றி சாப்பிட்டுவிடாதீர்!!

Divya

பசும் பாலில் இருந்து கிடைக்க கூடிய ஒரு பொருள் தான் நெய்.தயிரில் இருந்து மோர் எடுத்து அதில் இருந்து வெண்ணையை பிரித்து காய்ச்சினால் நெய் கிடைக்கும்.இந்த நெய் அதிக வாசனை நிறைந்தவையாக உள்ளது.இனிப்பு உணவுகள் தயாரிக்க நெய் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

நெயில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.உணவில் நெய் சேர்த்துக் கொண்டால் குடல் இயக்கங்கள் எளிதாகும்.மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து காத்துக் கொள்ள நெய் சாப்பிடலாம்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நெய் சாப்பிடலாம்.இதில் நல்ல கொழுப்பு அதிகளவில் இருப்பதால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

உணவில் நெய் சேர்த்துக் கொள்வதால் மூளையின் செயல்பாடு மேம்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.சருமம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்க உணவில் நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

இதய ஆரோக்கியம் மேம்பட உணவில் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.கண் பார்வை அதிகரிக்க நெய் சேர்த்த உணவுகள் சாப்பிடலாம்.ஆனால் சிலவகை உணவுகளில் நெய் சேர்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

அதேபோல் சில உடல் நல பாதிப்பு இருப்பவர்கள் நெய் சேர்த்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.தேனில் நெய் சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு பாதகமாக மாறக் கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவை இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொண்டால் அவை நச்சாக மாற வாய்ப்பிருக்கிறது.அதேபோல் தயிர் மற்றும் நெய்யை ஒன்றாக சேர்த்து சாப்பிடக் கூடாது.இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.

தேநீரில் நெய் சேர்த்து சாப்பிடும் பழக்கம் பலரிடம் இருக்கிறது.இது உடலில் செரிமான பிரச்சனைக்கு வழிவகுத்துவிடும்.

அதேபோல் தண்ணீரில் நெய் சேர்த்து பருகுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.இது உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு செயலாகும்.சிலர் சூடான நீரில் நெய் சேர்த்து பருகும் பழக்கம் கொண்டிருப்பார்கள்.இதுவும் செரிமான அமைப்பை பாதிக்கச் செய்துவிடும்.மசாலா உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை உண்டாகிவிடும்.

ஆனால் பருப்பு,சூடான சாதம்,சப்பாத்தி போன்றவற்றில் நெய் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.