விவசாயிகளுக்கு வந்த அதிர்ஷ்டம்!!22 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக அரசு!!

Photo of author

By Gayathri

விவசாயிகளுக்கு வந்த அதிர்ஷ்டம்!!22 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக அரசு!!

Gayathri

Good luck to farmers!! Tamil Nadu government has issued 22 new announcements!!

தமிழக அரசு வேளாண்மையை ஊக்கப்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருப்பதோடு, விவசாயம் தொடர்பான 22 முக்கிய மற்றும் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. இது அனைத்திலும் விவசாயிகள் பயன்பெற்று தங்களுடைய வாழ்வாதாரத்தையும் வேளாண் துறையில் முக்கிய மாற்றங்களையும் ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழக அரசின் முக்கிய மற்றும் புதிய 22 அறிவிப்புகள் பின்வருமாறு :-

✓ 7 ஒருங்கிணைந்த வேளாண்மை தமிழ்நாடு விரிவாக்க மையங்கள் 25.3 கோடி நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ திருநெல்வேலி கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு உரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் என 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட இருக்கிறது.

✓ மானாமதுரையில் குளிர் பதன கிடங்கு வசதிகள் 4 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட இருக்கிறது.

✓ குறுவட்ட அளவில் செயல்படும் 5 துணை வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு ரூ.3.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ வேளாண் இயந்திர கூடாரங்கள் 15 இடங்களில் 3.30 கோடி ரூபாய் செலவில் அமைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

✓ தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 386 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கம் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மின்னணு வரகை பதிவேடு பொருத்தப்பட 2.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

✓ தரமான உயிரியல் பூச்சிக்கொல்லிகள் கிடைப்பதை உறுதி செய்ய தஞ்சையில் எங்கே வரும் உயிரியல் பூச்சிக்கொல்லி ஆலையில் புதிய கட்டிடத்தை வடிவமைக்க 85 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

✓ தோட்டக்கலைத் துறைக்கு 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அதிக அளவு நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

✓ மாம்பழ விவசாயிகளுக்கு கடன் உதவியுடன் மாம்பழக் கூழ் தயாரிப்புக் கூடம் அமைக்க 8 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 12.22 லட்சும் ரூபாய் விகிதம் 98 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

✓ புதிய நடமாடு மண் பரிசோதனை நிலையம் சேலம் மாவட்டத்தில் அமைக்க 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

✓ அரசு இயந்திர கலப்பை பணிமனைகளில் விவசாயிகளுக்கு தேவையான சிறிய இயந்திரங்களை உருவாக்கி வழங்க 30 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

✓ சேலத்தில் வேளாண்மை பொறியியல் துறை வளாகத்தில் புதிய வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கம் மையம் 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ சிறுதானியங்களை பயிரிடும் விவசாயிகளுக்கு ஏற்றுமதி தொடர்பான பயிற்சி மற்றும் வர்த்தக இணைப்பு கூட்டம் நடத்தப்பட்டு பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ ஒருங்கிணைந்து தரகட்டுப்பாடு பிரிவு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ தென்னை விவசாயிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க முறையான பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

✓ மாம்பழ விவசாயிகளுக்கு மாமரங்களில் கவாத்து செய்வது குறித்து செயல் விளக்க விழிப்புணர் பயிற்சி வழங்கப்படும் என்றும் முதல் கட்டமாக 500 நபர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.