முதல்வர் அறிவித்த குட் நியூஸ்!! சிறு குறு நடுத்தர தொழில் நிறுவங்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு
ஜூன் 27 ஆம் தேதி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் கொண்டாப்படுகிறது. இந்த நிலையில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழா சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துக் கொண்டார்.
இந்த விழாவில் பேசிய ஸ்டாலின் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கு சிறு குறு,நடுத்தர நிறுவனங்கள் பெரும் பங்கு வகித்து வருகிறது. ஏற்கனவே முதல்வர் இந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாப்படும் என்று அறிவித்திருந்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில்முனைவோர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தொடங்கிவைத்தார். மேலும் அந்த திட்டத்தின் படி 100 பயனாளர்களுக்கு தொழில் தொடங்க 18.94 கோடி மானியத்தொகை வழங்க ஆணையிட்டார்.
இதனையடுத்து செங்கல்பட்டு, மதுரை,திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் குறுத்தொழில் மேம்பாட்டு குழுமம் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்திர தொழில் நிறுவனகளின் சந்தை வாய்ப்புகள் உருவாக்க மெய் நிகர் கண்காட்சியகம் தொடங்கி வைத்தார்.
மேலும் புத்தகம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் வெற்றி பெற புத்தகம் கண்டுபிடிப்புகளுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கினர்.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அந்த விழாவின் மூலம் 734 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதன் மூலம் 30, 000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சேலம், ஓசூர் ,கடலூர் ஆகிய மாவட்டங்களில் புதிய தொழில் மையம் தொடங்கயுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
எற்கனவே 6 தொழிற்பேட்டைகள் உள்ள நிலையில் இன்னும் 6 தொழிற்பேட்டைகள் புதிதாக உருவாக்க நடைவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரித்துள்ளார். மேலும் புத்தக திட்டத்திற்கு 30 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.