பொதுமக்களுக்கு குட்நியூஸ்: 100 நாள் வேலையில் மக்களுக்கு சம்பள உயர்வு!! அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!!

Photo of author

By Jayachithra

பொதுமக்களுக்கு குட்நியூஸ்: 100 நாள் வேலையில் மக்களுக்கு சம்பள உயர்வு!! அரசு வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதிலிருந்தே கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பலவிதமான அறிவிப்புகளை செய்து வருகிறார். தமிழ்நாட்டில் இருந்து கண்டிப்பாக கொரோனாவை விரட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு உள்ளார். இதனை அடுத்து வேலை இல்லாதோருக்கு அரசு மூலமாக வேலையும் கிடைத்து வருகிறது. மக்களின் அனைத்து வித பிரச்சனைகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்வு கண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று வந்துவிடக்கூடாது என்பதற்காக தேர்வு அனைத்தையும் ரத்து செய்து உள்ளார். இதன் மூலமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அத்துடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இது மட்டுமல்லாமல் பெண்களுக்கு பல சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. பின் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

இதனை தொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஒவ்வொரு பணியாளருக்கும், ஒருநாள் ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தி வழங்க பரிசீலனை செய்ய இருப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

அதனைத் தொடர்ந்து 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தங்கள் பகுதி நலனுக்காக மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருக்கின்றார்.