ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்! நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Photo of author

By Parthipan K

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்! நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Parthipan K

Good news for Adi Dravidar students! Information published by the Minister of Finance!

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்! நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

2023 24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு  நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு பிற்பகலில் அலுவலர் ஆய்வுக்குழு கூடி பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திமுக தேர்தலில் வாக்குறுதியின் படி முதல் முறையாக தமிழகத்தின் வேளாண் துறைக்காக தனிப்பட்ட பட்ஜெட்  தாக்கல் செய்யப்பட்டது.

அதுபோலவே நடப்பாண்டும் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் வரும் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் பேசிய தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை, கோவை,திருச்சி, நீலகிரியில் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் அதற்காக ரூ 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.