அமேசான் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!! மெகா தள்ளுபடி வெளிவந்த அருமையான அறிவிப்பு!!

Photo of author

By Jeevitha

அமேசான் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!! மெகா தள்ளுபடி வெளிவந்த அருமையான அறிவிப்பு!!

Jeevitha

Good news for Amazon customers!! Great announcement of mega discount!!

அமேசான் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்!! மெகா தள்ளுபடி வெளிவந்த அருமையான அறிவிப்பு!!

அமேசான் என்பது அமெரிக்க நிறுவனம் ஆகும். அமேசான் மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கும் பெரும்பாலும் மக்கள் இதனை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் தற்போது அமேசான் மூலம் ஷாப்பிங் செய்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.

இதனை தொடர்ந்து பிரைம் டே விற்பனையை ஜூலை 15 ஆம் தேதி மற்றும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் போன்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பல உபகரணங்கள், அணியக்கூடிய பொருட்கள், ஆடைகள், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் போன்ற இன்னும் பல பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கிக் கொள்ளலாம்.

அதனையடுத்து அமேசான் ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ வங்கி  கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்டுத்தி 10 சதவீதம் சேமிக்க முடியும் என்ற அறிவிப்பையும் அறிவித்துள்ளது.

இந்த செய்தி அமேசான் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் மலிவான விலையில் பல பொருட்களை வாங்கும் வசதி உள்ளது. அதேபோல் ஈபிஐ பரிவர்த்தனைகளை பயன்படுத்தி பணம் செலுத்துவதில் 10% சதவீதம் சேமிக்கலாம்.

மேலும் ஜூலை 15 ஆம் தேதி மற்றும் 16 ஆம் தேதி விரபனையின் போது வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் 11 ஆர் 5ஜி , ஆப்பிள் ஐபோன் 14, ரெட்மி 12சி, சாம்சங் கேலக்சி எம் 33 5ஜி, மற்றும் ஐக்யூ 0011 5ஜி போன்ற ஸ்மார்ட் போன்கள் சலுகை விலையில்  கிடைக்கும் என்று அமேசான் அறிவித்துள்ளது.

இந்த  தள்ளுபடியை பயன்படுத்தி கொள்ளுமாறு அமேசான் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.