போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்!! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

0
79
Good news for transport workers!! Action order issued by Chief Minister Stalin!
Good news for transport workers!! Action order issued by Chief Minister Stalin!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குட் நியூஸ்!! முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அதிரடி உத்தரவு! 

முதல்வர் ஸ்டாலின் போக்குவரத்து தொழிலாளர்களை கௌரவிக்கும் வண்ணம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

இதன்படி அவசர தேவைகளுக்காக கொரோனா காலத்தில் பணிபுரிந்த போக்குவரத்து தொழிலாளர்களை சிறப்பிக்கும் வகையில் மூக்குத்தொகை ஊக்கத்தொகை ரூ.17.15 கோடி மற்றும் ஊதிய நிலுவைத் தொகையான ரூ. 171. 05 கோடி வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

இதுபற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து வரும் 1.14 லட்சம் பணியாளர்களால் தினமும் 20111 பேருந்துகள் வரை தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், போன்ற மாநிலங்களுக்கு மக்களின் போக்குவரத்து தேவைக்காக இயக்கப்பட்டு பல்வேறு பயணிகள்  பயன்பெற்று வருகின்றனர்.

2020,  2021 கொரோனா காலங்களில் 1.7 கோடி மக்களின் உயிர்காக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்ட முழு அடைப்பின் போது அரசு போக்குவரத்து கழகங்கள் அத்தியாவசியமான பேருந்து தேவைக்காக மக்களுக்கு பேருந்துகளை இயக்கின. அப்போது போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் உயிரையும் துச்சம் என மதித்து பணி புரிந்தனர். அவர்களை அரசு கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் சிறப்புதொகை ரூ.17.15 கோடி வழங்குவதற்கு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் போக்குவரத்து கழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இருந்தபோதிலும் தொழிலாளர்களின் நன்மைக்காக 14 வது ஊதிய ஒப்பந்தத்தை  01-09 -2019 முதல் அமல்படுத்தி ஊதிய உயர்வானது அளிக்கப்பட்டு தற்போது வரை வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 2022 ஜனவரி மாதம் முதல் 096060 2022 வரை வரையிலான காலத்திற்கான ஊதிய நிலுவைத் தொகைரூ. 171.05 வழங்குவதற்கு முதல்வர்   ஸ்டாலின் அவர்கள் பெயரில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆணை மூலம் போக்குவரத்து துறை தொழிலாளர்களின் நலனை மேம்படுத்துவது மட்டுமில்லாமல், அவர்களது பணியை சிறப்பித்தது போலவும் ஆகும்.