தமிழகத்தில் இருக்கக்கூடிய பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பாக ஓராண்டு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட இருப்பதாக தமிழக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு இருக்கக்கூடிய செய்தியில் தெரிவித்திருப்பதாவது :-
தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் என்ற தலைப்பில் தமிழ்நாடு மற்றும் அகமதாபாத் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தக நிறுவனங்கள் இணைந்து நடத்தக்கூடிய ஓராண்ட சான்றிதழ் பயிற்சி வகுப்பானது வருகிற ஜூன் 2 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த வகுப்புகளுக்கு பயிற்சி கட்டணமாக 80 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஓராண்டு பயிற்சி வகுப்புகள் சேரணிக்கக் கூடிய மாணவர்கள் கட்டாயமாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு பட்டய படிப்பு இந்த ஓராண்டு பயிற்சி வகுப்புகள் சேரணிக்கக் கூடிய மாணவர்கள் கட்டாயமாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு பட்டய படிப்பு , ஐ டி ஐ அல்லது 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்புடைய பாடப்பிரிவுகளில் இரண்டு வருட அனுபவம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேல் கூறப்பட்ட அனைத்தும் இருக்கக்கூடியவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.editn.in/Web.OneYearCourse என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக விண்ணப்பிக்க ,
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தக நிறுவனத்தின் மாவட்ட திட்டம் மேலாளர்,
திருப்பத்தூர்.
தொலைபேசி எண் – 8668101638/8668107552
தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க திட்டத்தின் கீழ் இணையக்கூடிய மாணவர்களில் 5 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கான செலவு முழுவதையும் அரசை ஏற்கும் என தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.