தங்க முதலீட்டாளர்களுக்கு ஒரு குட் நியூஸ்! மத்திய  அரசின் திடீர் அறிவிப்பு!

0
125

நமக்கெல்லாம் தங்கம் என்றால் கடைக்கு போய் வாங்கும் ஆபரணத்தங்கம் தான் தெரியும். ஆனால் தங்கத்தில் அதிக முதலீடு செய்பவர்கள் தங்க பத்திரங்களை வாங்குவார்கள்.

இந்த தங்கத்தினை ரிசர்வ் வங்கி  வினியோகம் செய்யும். இந்த தங்கப் பாத்திரத்தில் விலையை இந்திய தங்கம் மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் நிர்ணயிப்பார்கள்.

கடந்த முறை கிராமுக்கு ரூ.5,334 என்று விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த முறை கிராமுக்கு ரூ.5,117 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தங்க பத்திரத்தின் மூலம் கிராமுக்கு ரூ.5,067 சலுகை விலையில் வாங்கிவிடலாம்.

இந்த தங்கப் பாத்திரத்தில் டிஜிட்டல் முறையில் வாங்குவதற்காக கிராமத்திற்கு ரூ.50 சலுகை தொகையை அளித்துள்ளது. இதன் நோக்கம் என்னவென்றால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக இப்படி ஒரு சலுகை ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து மத்திய அரசுஅறிவித்துள்ளது.

எனவே தங்கத்தின் மூலம் முதலீடு செய்பவர்கள் தங்கத்தை கடையில் போய் வாங்குவதை தவிர்த்து  தங்க பத்திரம் மூலம் வாங்குவதால் கூடுதல் சலுகையும் கிடைக்கும் என்பதை அறிய வேண்டும்.  

 

Previous articleயானை சாணத்தில் போட்ட டீயை சுவைத்து குடிக்கும் பிரபல நடிகர்!
Next articleதமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா? போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம்!!