அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்!! பழைய ஓய்வூதிய திட்டம்.. அமைச்சர் வெளியிட்ட தகவல்!!
மத்திய அரசானது நிதிச்சுமையை குறைக்க வேண்டுமென்பதற்காக என்பிஎஸ் (NPS) என்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.இந்த திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த என்பிஎஸ் என்ற திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களின் சம்பள கணக்கிலிருந்து 10% சதவீதம் இதற்கென்று பிடித்தம் செய்யப்படும்.அதேபோல இதற்கு நிகரான தொகையையும் அரசு வழங்குகிறது.
ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தில் இவ்வாறான பங்களிப்பு கிடையாது.இதனை மையப்படுத்தி மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிடும் படி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.குறிப்பாக தமிழக அரசிடம் இது குறித்து பலமுறை கோரிக்கையும் வைத்துள்ளனர்.கடந்த 2003 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு மட்டும் தான் பழைய ஓய்வூதியம் அமலில் இருக்கும் என்றும், அந்த ஆண்டை கடந்து பணிபுரியும் அனைவரும் புதிய ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் வருவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனை முற்றிலும் கை விடும் படி ஊழியர்கள் மாநில அரசிடம் கோரிக்கை வைத்ததையடுத்து இது குறித்து விசாரணை செய்ய குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது.இந்த குழுவானது தற்பொழுது பலதரப்பட்ட விசாரணைகளுக்குப் பிறகு ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையத்துடன் ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் தற்பொழுது இது குறித்து பரிசீலனை செய்யப்பட இருப்பதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.விரைவில் பழைய ஓய்வூதிய திட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.