அரசு ஊழியர்களுக்கு செம்ம நியூஸ்.. வீட்டு வாடகைப்படியை உயர்த்திய தமிழக அரசு!!

Photo of author

By Divya

அரசு ஊழியர்களுக்கு செம்ம நியூஸ்.. வீட்டு வாடகைப்படியை உயர்த்திய தமிழக அரசு!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தவிர பலவித அலவன்ஸ்களை 7வது ஊதியக்குழு வழங்கி வருகிறது.இதில் ஒன்றான வீட்டு வாடகை கொடுப்பனவு(HRA) உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இந்த வீட்டு வாடகை கொடுப்பனவு(HRA) அதிகரிப்பின் பலன் கிடைக்கும்.ஒரு மத்திய அரசு ஊழியர்கள் வேலை செய்யும் அலுவலகம் அமைந்துள்ள நகரத்தை பொறுத்து HRA 27,18,9 சதவீதம் என்ற விகிதத்தில் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த இரு மாதங்களுக்கு முன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் சில அலவன்சுகளும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டன.

இந்நிலையில் மத்திய அரசு வீட்டு வாடகைப்படியை 30, 20,10 சதவீதம் என்று உயர்த்தி மத்திய அரசு ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது.இதனை தொடர்ந்து தமிழக அரசின் மத்திய தொகுப்பில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படியை(HRA) தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது.வீட்டு வாடகைப்படியை(HRA) கடந்த ஜனவரி 1 முதல் கணக்கிட்டு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி X பிரிவு நகரங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு 30%,Y பிரிவு நகரங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு 20%,Z பிரிவு நகரங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு 10% என்று திருத்தப்பட்டு அவர்களின் அடிப்படை ஊதியத்தில் இருந்து வழங்கப்பட இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை X பிரிவு நகரம் என்றால் அவை தலைநகர் சென்னை தான்.Y பிரிவு நகரங்களில் சேலம்,மதுரை,திருப்பூர்,திருச்சி,ஈரோடு ஆகிய 5 நகரங்கள் இருக்கிறது.X மற்றும் Y நகரங்களை தவிர மற்ற அனைத்தும் Z பிரிவிற்கு கீழ் வரும்.

தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர் X பிரிவு நகரத்தில் வேலை செய்பவராக இருந்தால் வீட்டு வாடகைப்படி 27% இருந்து 30% ஆக அவருடைய ஊதியத்தில் உயர்த்தி வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர் Y பிரிவு நகரத்தில் வேலை செய்பவராக இருந்தால் வீட்டு வாடகைப்படி 18% இருந்து 20% ஆக அவருடைய ஊதியத்தில் உயர்த்தி வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர் Z பிரிவு நகரத்தில் வேலை செய்பவராக இருந்தால் வீட்டு வாடகைப்படி 9% இருந்து 10% ஆக அவருடைய ஊதியத்தில் உயர்த்தி வழங்கப்படும்.